3 வயது முதல் 5 வயது வரை

கவனிக்க வேண்டிய பதிவு : குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்

நம் குழந்தைகளை எதிர்காலத்தில் வல்லவர்களாக, நட்ச்சத்திரங்களாக மாற்ற ஒரு கட்டிடத்தின் அடித்தளம் எப்படி உறுதியாக அமையவேண்டுமோ அது போல குழந்தையின் முதல் 5 வயது மிகவும் முக்கியமானது. இந்த வயதில் அவர்களை அறிவாளிகளாக மாற்ற அடித்தளம் அமைக்க வேண்டும். இதற்காக சில பயிற்சிகளை இந்த வலைதளத்தின் பயிற்சிகள் பக்கத்தில் கொடுத்துள்ளேன். இவை பற்றிய விரிவான பயிற்சியை பெற அணுகவேண்டிய முகவரி

natchatthirangal @gmail.com 

செல்பேசி எண் - 91769 67377


வாழ்க வளமுடன் 

இந்த வயதில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து இருப்பார்கள். இதற்கு முன் play School-க்கு சென்று இருந்தாலும், கட்டுப்பாடு, கண்டிப்புகள் நிறைந்த விளையாட்டு தவிர்ர்த்து படிக்கவும் ஆரம்பிக்கும்  வயது இது தான். இது வரை தன தாயின் கையால் உணவருந்திய குழந்தைகள் தானே உண்ண வேண்டிய  சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். இதனால் தாங்கள் எதையோ இழப்பது போன்ற எண்ணுகிறார்கள். மேலும் தாமே   உண்ண  ஆரம்பிப்பதால் நிதானமாகாவும்  உண்பதால் பல நேரங்களில் மதிய உணவு உண்ணாமலேயே பள்ளியில் இருந்து திரும்புவார்கள். இதை சரி செய்ய அவர்களுக்கு பிடித்த மாதிர்யும், அதே சமயத்தில் சத்துள்ளதாகவும் கொடுக்க சில டிப்ஸ் கொடுத்துள்ளேன். முயற்ச்சி செய்து பார்க்கவும்.

பின்னாளில் பல receipies இடம் பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

TIPS:-


  • இந்த வயதில் கலர் கலராய் இருந்தால் ரொம்ப பிடிக்கும்.
  • கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது அனைத்திலும் சிறிது சிறிதோ எடுத்து mixi-யில் மைய அரைத்து இட்லு மாவில் கலந்து தோசை வார்த்து கொடுக்கவும். பச்சை கலர் தோசை அழகாகவும், மொரு மொருவென்றும் 2-க்கு 3 அல்லது 4 தோசைகளை குழந்தைகள் கேட்டு உண்பார்கள்.
  • இதைப் போலவே கேரட் கலந்தால் ஆரஞ்ச்சு(Orange)  கலர், பீட்ரூட் சேர்த்தால் பர்புள்(Purple) கலர் என்று தங்கள் குழந்தைகளின் tiffan box களைகட்டுமே!
  • இதே போல் கலர் கலர் காய்கறிகளில் அவர்களுக்கு ஏற்றார் போல் காரம் சேர்த்து பொரியல் செய்து சாதத்தில் கலந்தால் கலர் கலர் சாதம் ரெடி.
  • குழந்தைக்கு Maagi ரொம்ப பிடிக்கும் என்றால் அதில் உள்ள மசாலாவை தவிர்த்து அதற்க்கு பதில் கலர் கலரை காய்கறிகள் கலந்து மாகி செய்து கொடுக்கலாம். குழந்தைக்கு பிடித்த மாதிரியும் ஆயிற்று. சத்தான உணவாகவும் ஆகிவிட்டது.
  • இது போல் பல காய்கறிகள் கலந்து உப்புமா செய்து கொடுக்கலாம்.
  • குழந்தைக்கு பிரட் பிடிக்கும் எனில் பிரட் - ஐ நெய் அல்லது வெண்ணையில் ரோஸ்ட் செய்து பின்னர் மேலே வெண்ணை தடவி கொடுத்தால், பிரடை நேரம் கழித்து உண்ணாலும் மிருதுவாக இருக்கும். இதை ஸ்நாக்ஸ்-ஆக கொடுக்கலாம்.
  • இதே போல் சப்பாத்தி செய்து கொடுத்தாலும் சூடாக இருக்கும் போதே வெண்ணையை மேலே தடவினால் மதியம் குழந்தைகள் சாப்பிடும் வரை சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
  • மதிய வேலை Tiffan கொடுத்தால் காலையில் குழந்தைகளுக்கு ஏதாவது காய் கலந்து சாதம் ஊட்டி அனுப்பலாம். அல்லது பருப்பு சாதத்துடன் கை கலந்து நாமே ஊட்டி விடலாம். இது மதியம் குழந்தை சரியாக உணவருந்தவில்லை என்றாலும் தேவையான சத்து காலை உணவிலேயே கிடைத்து விடுவதால் சீக்கிரம் சோர்ந்து போகாமல் குழந்தையை பார்த்துக்கொள்ள உதவும்.
  • மேலும் வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ குலோப்ஜாமுன் அல்லது பால்கோவா போன்ற கொலஸ்ட்ரால் நிறைந்த உணவை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு தேவையான கொலஸ்ட்ரால் இழபீட்டை சரிசெய்யலாம்.  இதற்காக அடிகடி கொடுப்பது தேவையற்ற கொழுப்பு சத்தை அதிகரித்து விடும். அளவாக இருந்தால் எதுவும் நன்றே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே என்பதை நினைவில் கொள்ளவும்.

கீழ் உள்ள வலைதளத்தை பின்பற்றி தங்கள் குழந்தையின் நுண்ணறிவைப் பெருக்கி குழந்தையின் எதிர்காலத்தை வளமாக்குங்கள்.

3 வயது முதல் 5 வயது வரை


இந்த வலைதளத்தை நீங்கள் மட்டும் பயன் பெறுவதோடு தெரிந்தவர் அனைவருக்கும் கூறி பயன் பெற வாழ்த்துகிறோம்

வாழ்க வளமுடன்.

மேலும் இவை போல் விரிவான பயிற்சிகளை பற்றி அனைத்தையம் அறிந்து கொள்ள அணுகவும்  e -mail விலாசம்

natchatthiriangal@gmail.com
செல்பேசி எண்  - 91769 67377

இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

வாழ்க வளமுடன்

மேலும் தங்களின் பெயர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 


natchatthirangal@gmail.com

வாழ்க வளமுடன்