2 வயது முதல் 3 வயது வரை

கவனிக்க வேண்டிய பதிவு : குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்

நம் குழந்தைகளை எதிர்காலத்தில் வல்லவர்களாக, நட்ச்சத்திரங்களாக மாற்ற ஒரு கட்டிடத்தின் அடித்தளம் எப்படி உறுதியாக அமையவேண்டுமோ அது போல குழந்தையின் முதல் 5 வயது மிகவும் முக்கியமானது. இந்த வயதில் அவர்களை அறிவாளிகளாக மாற்ற அடித்தளம் அமைக்க வேண்டும். இதற்காக சில பயிற்சிகளை இந்த வலைதளத்தின் பயிற்சிகள் பக்கத்தில் கொடுத்துள்ளேன். இவை பற்றிய விரிவான பயிற்சியை பெற அணுகவேண்டிய முகவரி

natchatthirangal @gmail.com

 செல்பேசி எண் - 91769 67377


வாழ்க வளமுடன் 

நான் ஏற்கனவே சொன்னது போல ஒரு வயதிற்கு மேல் குழந்தைகளுக்கு சாப்பாட்டில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்பதற்க்காக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பது பொருள் அல்ல. நாம் தான் நம் குழந்தைகளுக்குத் தேவையான சத்தான உணவு முறைகளை கற்றுத் தர வேண்டும்.

குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியவை:-

  • பருப்பு
  • காய்கறிகள்
  • பழங்கள்
  • கொழுப்பு சத்து நிறைந்த பால், வெண்ணை, தயிர் முதலியவை
  • உள்ளுத்த வடை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சேர்த்தல் நலம்
  • 5 வயது வரை மற்ற எண்ணைகளுக்கு பதில் தேங்காய் எண்ணை சேர்த்து குழந்தைகள்ளுக்கு என்று தனியே சமைப்பது நன்று
  • குழந்தைகளுக்கு கசப்பு, புளிப்பு காரம் என்ற வேறுபாடுகள் கிடையாது. அனைத்தும் ஒவ்வொரு சுவை. ஆகவே பாகற்காய் கசப்பு அது வேண்டாம் என்று நாமே அதை ஒதுக்காமல் அவற்ற்றை நன்கு வறுத்து குறைந்த கசப்புடனோ, கசப்புத் தெரியாத வண்ணமோ சமைத்துக் கொடுத்து பழக்கி விட்டால் பின்னாளில் அவை நமைப் போல் பகற்கையை ஒதுக்காமல் உண்ண பழகிக்கொள்ளும்.
  • ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான் நான் பாகற்காயைச் சொன்னேன். இதே போல் அனைத்து காய்கறிகள், பழங்களையும் ஒதுக்காமல் நாம் இந்த வயதில் பழக்கிவிட்டால் பின்னாளில் என் குழந்தைக்கு இது பிடிக்காது என்று எந்தக் காய்கறியையும் சொல்லத் தேவையில்லை.
  • குழந்தைகள் உண்ணாமல் அடம் பிடிப்பது உனாவின் ருசி பிடிக்கவில்லை என்று மட்டும் நாம் கருதி விடக் கூடாது. அவைகளுக்கு தம்மை சுற்றி இருக்கும் பொருள்கள் அனைத்தும் புதியவை. அவற்ற்றை அறிந்து கொள்ளும் ஆவலினாலும், விளையாட்டுத் தனத்தினாலும் தான் அதிகம் உண்ண மறுக்கின்றன. ஆகவே உணவு கொடுக்கும் போது புது புதுக் கதைகள் கூறி கொண்டே உணவு கொடுங்கள். கண்டிப்பாக அனைத்துக் குழந்தையும் அனைத்தையும் சாப்பிடும்.
  • முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகள்.

அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாதவை :-

    • கடைகளில் விற்கும் pizza முதலிய Junk foods 
    • சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க காற்று(GAS ) நிரப்பிய packed items 
    • மிகவும் பொறித்த மொரு மொரு Items .
    • அதிக கிழங்கு வகைகள்
    • காபி, டீ முதலியவை
    • அதிக biscuits
    • அதிக chochlates
    • திரும்ப திரும்ப சுட வைத்த பால்
    • கசடு நிறைத்த எண்ணை(அடிக்கடி பயன்படுத்திய எண்ணை

      மேற்கூறியபடி தேவையான சத்தான உணவைக் கொடுப்பதுடன் தரையில் சிந்திய உணவை வாயில் வைக்காமல் பார்த்துக் கொண்டால் குழந்தை நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வளரும்.

      குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு

      இதனுடன் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் நாம் உதவி செய்துவிட்டால் நம் குழந்தை தான் எல்லாவற்றிலும் முதல் என்று நாம் மார்தட்டி கொள்ளலாம்.

      குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் தேவையான  இன்னும் பல விழயங்களை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எவ்வாறு கற்றுக் கொடுப்பது, கற்றுக் கொடுக்கும்போது கவனத்தில் வைக்க வேண்டியவை எவை எவை என்பது  பற்றியும், அறிய இந்த வலைதளத்தினை தொடர்ந்து  படிக்கவும். 

      தற்போது 2 வயது முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு என்னென்ன பயிற்சிகள் கொடுப்பது என்பது பற்றி ஒரு சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியுள்ளோம். மேலும் முழு விவரம் அறிய  கீழ் உள்ள வலைதளத்தினுள் நுழைக 

      இந்த வலைதளத்தை நீங்கள் மட்டும் பயன் பெறுவதோடு தெரிந்தவர் அனைவருக்கும் கூறி பயன் பெற வாழ்த்துகிறோம்

      வாழ்க வளமுடன்.


      மேலும் இவை போல் விரிவான பயிற்சிகளை பற்றி அனைத்தையம் அறிந்து கொள்ள அணுகவும்  e -mail விலாசம்

      natchatthiriangal@gmail.com
      செல்பேசி எண் - 9176967377


      இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

      வாழ்க வளமுடன்

      மேலும் தங்களின் பெயர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 

      natchatthirangal@gmail.com


      வாழ்க வளமுடன்

      8 கருத்துகள்:

      D.vedhavalli சொன்னது…

      endudaya Sonnuku 2 vayathu start aguthu food & health tips please

      Unknown சொன்னது…

      என் குழந்தைக்கு 2 1/2 வயது அடம் கோபம். என்ன செய்வது

      Unknown சொன்னது…

      எனது மகன் சாப்பிட அடம் பிடிக்கிறான்,அவனுக்கு இரண்டு வயது ஆகிறது வெறும் சத்து மாவு,கேழ்வரகு கஞ்சி மட்டும் தான் அவனுடைய உணவு,நன்றாக சாப்பிட்டவன் இப்போது சாப்பிடவில்லை,உணவு பழகும் போது மிக்ஸியில் அரைத்து கொடுப்பேன்,அதனால் தான் இப்போது சாப்பிடவில்லை என்று சொல்கிறார்கள்,அவன் சாப்பிட நான் என்ன செய்ய வேண்டும்.pls sollunga

      Kala anand சொன்னது…

      என் குழந்தைக்கு 2 வயது 3 மாதம் ஆகிறது இன்னும் தெளிவான வார்த்தைகள் வரவில்லை அவனை படிப்பில் ஆர்வமாக்குவது எப்படி எதையும் கவனிக்க மாட்டான்

      Unknown சொன்னது…

      என் குழந்தைக்கு 3வயது ஆகிறது.இதுவரை என்ன உணவு கொடுத்தாலும் உண்ண மறுக்கிறாள்.உணவு உண்ண நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

      Unknown சொன்னது…

      என் மகள் சாப்பிட மாட்டைகிறாள். என்ன பண்ணுவது. தெரியல

      பெயரில்லா சொன்னது…

      My baby weight roma oliya eruka weight pota vali

      பெயரில்லா சொன்னது…

      என் குழந்தை எடை குறைவாகா இருக்காங்க வெயிட் போட என்ன பன்னனும்