குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை

கவனிக்க வேண்டிய பதிவு : குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்

நம் குழந்தைகளை எதிர்காலத்தில் வல்லவர்களாக, நட்ச்சத்திரங்களாக மாற்ற ஒரு கட்டிடத்தின் அடித்தளம் எப்படி உறுதியாக அமையவேண்டுமோ அது போல குழந்தையின் முதல் 5 வயது மிகவும் முக்கியமானது. இந்த வயதில் அவர்களை அறிவாளிகளாக மாற்ற அடித்தளம் அமைக்க வேண்டும். இதற்காக சில பயிற்சிகளை இந்த வலைதளத்தின் பயிற்சிகள் பக்கத்தில் கொடுத்துள்ளேன். இவை பற்றிய விரிவான பயிற்சியை பெற அணுகவேண்டிய முகவரி

natchatthirangal @gmail.com 

 செல்பேசி எண் - 9176967377


வாழ்க வளமுடன் 

குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

குழந்தை பிறந்தவுடன் 6 மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்க வேண்டும். இந்த சீம்பால் எவ்வளவு முக்கியமேன்றரிய நாம் நம் கிராமத்துப்பக்கம் சென்றால் அறியலாம். இன்றும் நம் கிராமத்துப்பக்கம் பசு கன்று ஈன்றவுடன் கிடைக்கும் சீம்பால் சாது நிறைந்தது என்று பலரும் தேடிச்சென்று வாங்கிச் செல்வதைக் காணலாம். பசுவின் சீம்பால் அதன் கன்றுக்காக கடவுள் அளிப்பது. அது சத்து நிறைந்தது எனின் கடவுள் நம் குழந்தைக்காக நமக்களிக்கும் சீம்பாலும் சத்து நிறைந்ததே. ஆகவே சத்து நிறைந்த நம் குழந்தையின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பாலை நாம் கண்டிப்பாக நம் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.

அடுத்து வரும் 6 மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப் பால் போதவில்லை என்று கருதும் சமயத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கேரட், பீட்ரூட், கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை நன்கு வேகவைத்து மிக்ஸ்யில் அரைத்து அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி காலை 11 மணியளவில் கொடுக்கலாம். கண்டிப்பாக மாலையில் தர வேண்டாம்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு

குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை குழந்தையுடன் உரையாடுவதே போதுமானது. பிறகு 6 மாதம் முதல் நாங்கள் கேழே குறிபிட்டுள்ளபடி அவர்களுக்கு கற்றுகொடுத்தல் போதுமானது. தங்கள் குழந்தை தாங்கள் நினைததுன் போல  நிச்சயம் எதிர்கால தலைவன் தான்.

முக்கியமானதும் நம்மில் பலர் செய்ய தயங்குகிற விஷயம் குழந்தையுடன் உரையாடுவது. நாம் பலரும் நினைப்பது போல் குழந்தை பொம்மை அல்ல. அதற்கும் எல்லாம் தெரியும். நாம் பேசும் அனைத்து விஷயங்களையும் குழந்தை கிரகித்துக் கொள்கிறது. ஆகவே குழந்தை பிறந்தது முதல் பெரியவரிடம் உரையாடுவது போல் உரையாடுங்கள்.

எடுத்துக்காட்டாக குழந்தை பால் குடிக்கும் முன் என்னடா செல்லம் பசிக்கிறதா? பால் குடிப்போமா? இப்ப அம்மா பால் தருவேனாம். சமத்தா பால் குடிச்சிட்டு விளையாடுவீங்கலாம்.நீங்க இப்ப தான் பிறந்திருகிரீகளா அதுதான் எல்லோரும் உங்களை  பார்க்க வந்திருகிறார்கள். எல்லோரையும் பார்த்து சிரிப்பீர்கலாம். நீங்க சிரிச்சா எல்லோருக்கும் சந்தோஷமாம். என்னடா செல்லம் எல்லாரையும் சந்தொஷப்படுதுவீர்களா? சரி இப்ப பால் குடிப்போமா என்று குழந்தையிடம் உரையாடிக்கொண்டே பால் கொடுக்கலாம்.

இது போல் எபோழுதும் எது செய்தாலும் குழந்தையிடம் நாம் பேசிக் கொண்டே இருந்தால் குழந்தையின் கேட்கும் திறம் அதிகரிப்பதோடு குழந்தைக்கு பேச வேண்டும் என்ற ஆவலை தூண்டி குழந்தை சீக்கிரம்பேச ஆரம்பித்துவிடும்.

இவ்வாறு பேசிகொண்டே இருப்பதால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே ஒரு அன்யோன்யம் பிறக்கும். இதனால் எதிர்காலத்திலும் எல்லாவற்றையும் உங்களிடம் உங்கள் குழந்தை பகிர்ந்து கொள்ளும். இது போதுமே உங்கள் குழந்தையை உங்கள் விருப்பம் போல் நல்லவர்களாக வளர்க்க. 

மேலும் இவை போல் விரிவான தகவல்கள்  பற்றி அனைத்தையம் அறிந்து கொள்ள அணுகவும்  e -mail விலாசம்

natchatthiriangal@gmail.com

செல்பேசி எண் -  9176967377

இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

வாழ்க வளமுடன்

மேலும் தங்களின் பெயர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 


natchatthirangal@gmail.com


வாழ்க வளமுடன்